ஜார்க்கண்ட் அமைச்சர் மிதிலேஷ் குமார் தாக்கூருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று (ஜூலை 7) உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். பின்னர் அவரது மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், தற்போது அவர் சிகிச்சைக்காக ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த ஓட்டுநர்கள், காவலர்கள், சில அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என அனைவருக்கும் கரோனா இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
அமைச்சர் மிதிலேஷ் உடன் தொடர்பில் இருந்தவர்களின் மாதிரிகள், இன்னும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. தற்போது ராஞ்சியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 பேராக உள்ளது.