ETV Bharat / briefs

IPL PLAYOFF: மும்பை இந்தியன்ஸை துவம்சம் செய்யுமா சிஎஸ்கே? - சென்னை

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய முதல் தகுதிச் சுற்று போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

IPL Playoff: முரளி விஜய் ரிட்டன்ஸ்; சென்னை பேட்டிங்
author img

By

Published : May 7, 2019, 7:16 PM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் தகுதிச் சுற்றுப் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். சென்னை அணியில், கேதர் ஜாதவுக்கு பதிலாக முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார். மறுமுனையில், மும்பை அணியில், மிட்சல் மெக்லனகனுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் இடம்பெற்றுள்ளார்.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. முன்னதாக, இவ்விரு அணிகளும் இறுதியாக 2015இல்தான் தகுதிச் சுற்றுப் போட்டியில் மோதியது. அதில், சென்னை அணியே வெற்றிபெற்றது, இதனால், இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றிபெறும் என சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தத் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் மைதானத்தில், அந்த அணியின் கேப்டன் தோனி மூன்றுமுறை மட்டுமே பேட்டிங் செய்துள்ளார். அதில், 156 ரன்களை எடுத்து அவர் ஒரு முறையும் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதனால், இன்றைய ஆட்டத்திலும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணி விவரம்: தோனி (கேப்டன்), வாட்சன், முரளி விஜய், ரெய்னா, டு பிளசிஸ், ஜடேஜா, ராயுடு, பிராவோ, ஹர்பஜன் சிங், தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், இம்ரான் தாஹிர்

மும்பை அணி விவரம்: ரோகித் ஷர்மா(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், டி காக், ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, பொல்லார்ட், ராகுல் சஹார், ஜெயந்த் யாதவ், பும்ரா, மலிங்கா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.