இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை மூலம் செயல்படும் தமிழ்நாடு அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் தாய்-சேய் பாதுகாப்பு வாகன சேவையில் பணிபுரிய ஓட்டுநர் பணிக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
கீழ்க்காணும் தகுதியுடைய ஓட்டுநர்கள் வருகின்ற 20ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம். கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ச் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் நிறைந்திருக்க வேண்டும். உயரம்: 162.5 செ.மீ, வயது வரம்பு: 25 முதல் 40 வயதுவரை.
மாத ஊதியம்: ரூ.10,000 (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டால் கூடுதலாக ரூ.1,800 வழங்கப்படும்)
தகுதியும், விருப்பமுடையவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களுடன் வந்து, நேர்காணலில் கலந்து கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேர்காணலுக்கு வருபவர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், கூடுதல் விவரங்களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, விழுப்புரம் மாவட்ட கிளை அலுவலகம், விழுப்புரம். (தொலைபேசி எண்: 8754006377) தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.