ETV Bharat / briefs

விலங்குகள் நல வாரிய நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்!

சென்னை : நாய்களை விற்பனை செய்வதை மிருகவதை எனக் கூறி அவற்றை விலங்குகள் நல வாரியம் பறிமுதல் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

விலங்குகள் நல வாரியத்திற்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்!

author img

By

Published : Jul 23, 2020, 12:34 AM IST

கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு உருவாக்கிய மிருகவதைத் தடுப்புச் சட்ட திருத்த விதிகளின்படி நாய்களை இனப்பெருக்கம் செய்யும் அமைப்புகள் விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் அவ்வாறு பதிவு செய்யாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் வசமுள்ள நாய்கள் தங்கள் வசப்படுத்திக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, அந்த விதிகளில் கலப்பின நாய்களை இனப்பெருக்கம் செய்ய வைப்பது மற்றும் விற்பனை செய்வது மிருகவதையை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிகளை ரத்து செய்யக்கோரி சென்னை அண்ணாநகரை சேர்ந்த கென்னல் கிளப் ஆப் இந்தியா என்ற உயரின நாய் உரிமையாளர்களின் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ. பி சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர்.ஸ்ரீனிவாஸ், "நாய்களை இனப்பெருக்கம் செய்ய வைப்பது மிருகவதை ஆகாது. இந்த விவகாரம் மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால், மத்திய அரசுக்கு இதில் விதிகளை வகுக்க அதிகாரம் இல்லை" என தெரிவித்தார்.

வழக்கில் தாங்களாக இணைந்துகொண்ட தனியார் தன்னார்வ அமைப்புகள் மற்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், "நாய்களை இனப்பெருக்கம் செய்ய வைப்பது குற்றம் ஆகாது என்றாலும், அதில் முறையான விதிகள் பின்பற்றப்படாவிட்டால் அதனை மிருகவதை என்று தான் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் மத்திய அரசு விதிகளை பின்பற்றவில்லை என்றால் அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது" என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், செல்லப்பிராணி உரிமையாளர்களிடையே ஏற்கனவே கரோனா தொற்று அச்சத்தில் உள்ளது. இந் நிலையில், கூடுதலாக எங்கே இன்னும் தங்களது செல்லப் பிராணிகளை அபகரித்து சென்று விடுவார்களோ என்ற பயத்தை நாங்கள் ஏற்படுத்த விரும்பவில்லை என்றனர்.

மேலும், மத்திய அரசின் விதிகளை பின்பற்றவில்லை என்ற காரணத்தைச் சொல்லி விலங்குகள் நல வாரியம், செல்லப்பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்களிடம் இருந்து நாய்களை பறிமுதல் செய்ய இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.

அதே நேரத்தில், விலங்குகள் நலன் சார்ந்த தன்னார்வ அமைப்புகளும், மத்திய அரசும் இந்த விவகாரம் மிருகவதைக்குள் வருமா? என்பது குறித்து உரிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.