ETV Bharat / briefs

அமெரிக்காவில் தவித்த தமிழர்கள் தாயகம் திரும்பினர்! - indians stuck in america

சென்னை: கரோனா ஊரடங்கால் அமெரிக்காவில் சிக்கித் தவித்த 152 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட தமிழர்கள்!

author img

By

Published : Jun 17, 2020, 9:52 AM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, பல தளர்வுகளுடன் ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தளர்வு அடிப்படையில் மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கியபோதும், சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் ஏப்ரல் மாதம் தொடங்கி தமிழ்நாட்டில் தங்கியிருந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வங்கதேசம், ஃபிரான்ஸ் உள்பட பல நாடுகளை சேர்ந்த ஏழு ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அவர்களது சொந்த நாட்டிற்கு சிறப்பு விமானங்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதேபோல் வெளிநாடுகளில் சிக்கிதவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மத்திய அரசு கடந்த மே ஏழாம் தேதிமுதல் வெளிநாடுகளில் தவிப்பவர்களை அழைத்து வர வந்தே பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதன் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து விமானங்களை இயக்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் சிக்கியவர்களை அழைத்து கொண்டு சிறப்பு விமானம் ஒன்று சென்னை வந்தது.

இந்த விமானத்தில் எட்டு குழந்தைகள், 53 பெண்கள் உள்பட 152 பேர் வந்தனர். இவர்களுக்கு குடியுரிமை மற்றும் சுங்க அலுவலர்கள் சோதனை முடிந்த பின்னர், விமான நிலைத்திலேயே தமிழ்நாடு சுகாதார துறை சார்பில் கரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

பின்னர் அரசு பேருந்துகளில் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் ஒட்டல்களில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: கோவிட்-19 பாதிப்பாளர்களை மரணத்திலிருந்து காக்கும் ஸ்டீராய்டு மருந்துகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.