ETV Bharat / briefs

தட்டுத்தடுமாறி 268 ரன்கள் எடுத்த இந்தியா

author img

By

Published : Jun 27, 2019, 7:34 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 268 ரன்களை எடுத்துள்ளது

இந்தியா 268 ரன்கள் குவிப்பு

உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டது.

IND VS WI
டாஸ் வென்ற இந்தியா

மான்செஸ்டரில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத்தொடர்ந்து, அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா 18 ரன்களில் வெளியேறினார்.

IND VS WI
18 ரன்களுக்கு நடையைக் கட்டிய ரோகித் ஷர்மா

பின்னர் கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த கோலி சிறப்பாக பேட்டிங் செய்தார்.இதையடுத்து, இப்போட்டியில் 48 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடி வந்த கே.எல்.ராகுல், ஹோல்டர் பந்துவீச்சில் போல்டாகி நடையைக் கட்டினார்.

IND VS WI
விஜய் சங்கர் விக்கெட்டை எடுத்த மகிழ்ச்சியில் ரோச்

பின்னர், நான்காவது வரிசையில், களமிறங்கிய விஜய் சங்கர் (14) , ஐந்தாவது வரிசையில் களமிறங்கிய கேதர் ஜாத்வ்( 7) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாக, இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை எடுத்திருந்தது.

IND VS WI
ரன் குவிப்பில் தீவிரம் காட்டிய தோனி - கோலி ஜோடி

இந்தத் தருணத்தில் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் தோனி. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து நேர்த்தியான ஷாட் ஆடிய கோலி, இந்தத் தொடரில் தொடர்ந்து தனது நான்காவது அரைசதத்தை அடித்தார்.

IND VS WI
கோலியின் ஆஃப் சைட் ஷாட்

இதனால், இப்போட்டியில் சதம் விளாசுவார் என எதிர்பார்த்த நிலையில், கோலி 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

IND VS WI
ஹர்திக் பாண்டியா

கோலியை தொடர்ந்து களத்தில் வந்த ஹர்திக் பாண்டியா 48 ரன்களில் அவுட்டாக, அவரைத் தொடர்ந்து வந்த முகமது ஷமி ரன் ஏதும் எடுக்காமல் நடையைக் கட்டினார்.

IND VS WI
தோனியின் லாஸ்ட் ஓவர் ஸ்பெஷல்

அதுவரை தனது ஆட்டத்தில் நிதானம் காட்டி வந்த தோனி, கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கும், நான்காவது பந்தை பவுண்டரிக்கும் பறக்கவிட்டார். இதன்மூலம், இந்தத் தொடரில் தனது முதல் அரைசதத்தை அடித்தார். பின்னர் ஆட்டத்தின் கடைசி பந்தை சிக்சர் அடித்து இன்னிங்ஸை ஃபினிஷ் செய்ய, இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 268 ரன்களை எடுத்ததிருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமார் ரோச் மூன்று, ஹோல்டர், காட்ரெல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Intro:Body:

CWC19: IND VS WI 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.