ETV Bharat / briefs

வெஸ்ட் இண்டீஸுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கை தொடங்கும் இந்தியா - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரின் மூலம் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன் தொடரை தொடங்குகிறது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீஸ் உடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கை தொடங்கும் இந்திய அணி
author img

By

Published : Jun 14, 2019, 7:54 AM IST

டெஸ்ட் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இதனால், டெஸ்ட் போட்டியை சுவாரஸ்யப்படுத்தும் விதமாக ஐசிசி புதுப் புது முயற்சிகளை கையாண்டுவருகிறது. முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பகலிரவு போட்டியை அறிமுகப்படுத்தியது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் விதமாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது.

2019 முதல் 2021 வரை இந்தத் தொடர் நடைபெறவுள்ளது. இதில், டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதல் ஒன்பது இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா ஆறு டெஸ்ட் தொடர்களில் (மூன்று தொடர் சொந்த மண்ணிலும், மூன்று தொடர் எதிரணி மண்ணிலும்) விளையாடுகின்றன. ஒவ்வொரு தொடரும் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகள் முதல் அதிகபட்சம் ஐந்து போட்டிகள் வரை நடைபெறும்.

ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் வழங்கப்படும். தொடரின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். இதில், வெற்றிபெறும் அணிக்கே ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்படும்.

வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு ஐசிசியின் வாகையாளருக்கான சிறப்புப் பரிசு வழங்கப்படும். இதை இந்திய அணி தொடர்ந்து மூன்று முறை வென்று அசத்தியுள்ளது. இம்முறை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வழங்குவதில் ஐசிசி புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கவுள்ளது. இந்திய அணி வரும் ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடும் போட்டி அட்டவணை:

1. வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா தொடர்:

தேதி போட்டி இடம்
ஆகஸ்ட் 22 - 26 முதல் போட்டி ஆண்டிகுவா
ஆகஸ்ட் 30 - செப்டம்ர் 3 இரண்டாவது போட்டி ஜமைக்கா

2. இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர்:

தேதி போட்டி இடம்
அக்டோபர் 2- 6 முதல் போட்டி விசாகப்பட்டினம்
அக்டோபர் 10 -14 இரண்டாவது போட்டி ராஞ்சி
அக்டோபர் 19-23 மூன்றாவது போட்டி புனே

3. இந்தியா - வங்கதேசம் தொடர்:

தேதி போட்டி இடம்
நவம்பர் 14 - 18 முதல் போட்டி இந்தூர்
நவம்பர் 22- 26 இரண்டாவது போட்டி கொல்கத்தா

4. நியூசிலாந்து - இந்தியா தொடர்:

தேதி போட்டி இடம்
பிப்ரவரி 21-25 முதல் போட்டி வெலிங்டன்
பிப்ரவரி 29 - மார்ச் 4 இரண்டாவது போட்டி கிறிஸ்ட் சர்ச்

இதைத்தொடர்ந்து, இந்திய அணி 2020 நவம்பர் முதல் ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி 2021இல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்த இரண்டு தொடர்கள் குறித்த அட்டவணை இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இந்திய அணி இந்தத் தொடரில் மொத்தம் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

Intro:Body:

Cwc19 - Ind vs NZ match delay due to rain

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.