திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ராமச்சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவருவதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இவர் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இனி எவரும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைசெய்வதைத் தடுக்கும்வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்பேரில் சிறையில் அடைக்கப்பட்ட வெங்கடேசன் மீது மாவட்ட ஆட்சியர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகள் விற்பனை - மூவர் கைது