ETV Bharat / briefs

இம்ரான் கானின் ஐடியாவை ரிஜக்ட் செய்த சர்ஃப்ராஸ்! - இந்தியா - பாகிஸ்தான்

மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வழங்கிய அறிவுரைகளை, பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது நிராகரித்துள்ளார்.

இம்ரான் கானின் ஐடியாவை ரிஜைக்ட் செய்த சர்ஃப்ராஸ்!
author img

By

Published : Jun 16, 2019, 10:36 PM IST

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில், இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, பாகிஸ்தான் அணியின் வெற்றி குறித்து அந்நாட்டின் பிரதமரும், முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் ட்வீட் செய்துள்ளார். அதில், குறிப்பாக டாஸ் வென்றால் என்ன செய்யவேண்டும் என்பதை குறித்து அவர் அறிவுறை வழங்கியிருந்தார்.

  • 2/5 Today, given the intensity of the match, both teams will come under great mental pressure and the power of the mind will decide the outcome of the match today. In Sarfaraz we are fortunate to have a bold captain & today he will have to be at his daring best.

    — Imran Khan (@ImranKhanPTI) June 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தனது ட்விட்டர் பக்கத்தில், ஆடுகளம் ஈரப்பதத்துடன் இல்லையெனில் டாஸ் வென்றால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைதான் தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பட்டிருந்தார். ஆனால், இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது டாஸ் வென்ற பின் பேட்டிங்கதைத் தேர்வு செய்யாமல், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Imran tweet to Pak team
டாஸ் வென்ற பாக். கேப்டன்

இதன்மூலம், தங்கள் அணிக்கு இம்ரான் கான் வழங்கிய அறிவுரையை அவர் நிராகரித்துள்ளார். இதன் விளைவாக, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 336 ரன்களை குவித்தது. இதையடுத்து, ஒரு பிரதமர் என்றும் பாராமல், அவர் வழங்கிய ஐடியாவை இப்படியா ரிஜக்ட் செய்வது என்று நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் சர்ஃப்ராஸ் அஹமதை வறுத்தெடுத்து வருகின்றனர்.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக உள்ள இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணிதான் 1992இல் முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.