ETV Bharat / briefs

வெளிநாட்டில் தற்கொலை செய்து கொண்ட கணவர்: உடலை மீட்டு தரக்கோரி மனைவி மனு! - பெரம்பலூர் கணவர் உடலை மீட்டு தரக்கோரி மனைவி மனு

பெரம்பலூர்: வெளிநாட்டில் தற்கொலை செய்துகொண்ட தனது கணவரின் உடலை மீட்டு கொண்டுவரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மனு அளித்தார்.

Husband who commits suicide overseas: petition for wife to recover body
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி மனு
author img

By

Published : Jul 9, 2020, 12:47 AM IST

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவருடைய மகன் முத்தமிழ்ச் செல்வன் (38). இவருக்கு கவிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

முத்தமிழ்ச் செல்வன் கடந்த ஐந்து வருடங்களாக துபாய் சார்ஜா பகுதியில் கூலி வேலை செய்துவந்தார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் துபாய்க்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக முத்தமிழ்ச் செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, ஜூலை 3ஆம் தேதி அவர் இறந்து விட்டதாக அவரது மனைவி கவிதாவிற்கு, முத்தமிழ்ச் செல்வனின் நண்பர்கள் தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக உடலை மீட்டு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தனது கணவரின் உடலை மீட்டு கொண்டுவரக் கோரி அவரது மனைவி, குழந்தைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும், மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தனது கணவரின் உடலை மீட்டுத்தர வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: வீட்டிற்குச் சென்று கரோனா பரிசோதனை - அரசிற்கு கமல் ஹாசன் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.