ETV Bharat / briefs

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்! - murdered wife

திருப்பூர் : மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவன் தாமாக முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Husband murdered his wife
Husband murdered his wife
author img

By

Published : Jun 29, 2020, 12:32 PM IST

Updated : Jun 29, 2020, 12:56 PM IST

திருப்பூர், காங்கயம் ரோடு சத்யா நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமது (வயது 32). இவர் தனியார் பனியன் கம்பெனியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிஷா பானு (வயது 26). இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அப்துல் சமதுவை திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்குப் பின் நிஷா பானு தொடர்ந்து தனது நண்பர்களுடன் செல்போனில் பேசி வந்ததாகவும், இந்நடவடிக்கையால் சந்தேகம் கொண்ட அப்துல் சமது அவரைக் கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு அப்துல் சமது வீடு திரும்பியபோது நிஷா பானு யாருடனோ செல்போனில் பேசி வந்துள்ளார். அப்துல் சமது வந்தவுடன் போனைத் துண்டித்துள்ளார். இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நிஷா பானு கையிலிருந்த செல்போனை அப்துல் சமது பறிக்க முயன்றும், அவர் செல்போனைத் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்துல் சமது அருகில் இருந்த குக்கரை எடுத்து அவரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சுருண்டு கீழே விழுந்த நிஷா பானுவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து நடந்ததை உணர்ந்த அப்துல் சமது, நேரடியாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

இச்சம்பவம் நடந்தது திருப்பூர் தெற்கு காவல் நிலையப் பகுதிக்குட்பட்டது என்பதால், அவரைக் காவல் துறையினர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், நிஷா பானுவின் உடலைக் கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட அப்துல் சமது மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கார்பன் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Last Updated : Jun 29, 2020, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.