ராமநாதபுரம் மாவட்டத்தில், கோடைக்காலம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தற்போது கரோனா ஊரடங்கினால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இருப்பினும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். ஆனால், இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், பாரதிநகர், பேருந்துநிலையம், அச்சுந்தன்வயல், பேராவூர் உள்ளிட்டப் பகுதிகளில் திடீரென கனமழை பெய்யத் தொடங்கி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்குகிறது.
இதனால் நகரின் முக்கிய சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்த நான்கு கடைகளில் திருட்டு: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு