துபாயிலிருந்து 176 இந்தியா்களுடன் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் நேற்று (ஆகஸ்ட் 18) காலை சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனா். அப்போது சென்னையை சோ்ந்த 28 வயது ஆண் பயணி ஒருவா் மீது சந்தேகம் ஏற்பட்டது.
தொடர்ந்து, அவருடைய உடமைகளை சோதனை செய்ததில் எதுவும் இல்லை. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில் அவருடைய உடலின் பின்பகுதியில் ஒரு சிறிய பாா்சல் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அதை எடுத்து பிரித்து பாா்த்தபோது ரூ. 9.71 லட்சம் மதிப்புடைய 185 கிராம் தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சுங்கத்துறை அவலுவலர்கள் தங்கத்தை கைப்பற்றி பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.