கோவா முதலமைச்சரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மனோகர் பாரிக்கர், கடந்த சில மாதங்களாக
புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு, கோவா தலைநகர் பனாஜியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே, அவ்வப்போது சட்டப்பேரவை நிகழ்வுகளிலும் அவர் தவறாமல கலந்து கொண்டு வந்தார்
இந்நிலையில், இன்று இரவு 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது இறப்புக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.