மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு இன்று மும்முரமாக நடைபெற்றது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில், அவரது மனைவி சாக்ஷி, அவரது தாய், மகளுடன் சென்று தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
இந்நிலையில், தோனியின் மகள் ஸிவா, எங்க அப்பா, அம்மா மாதிரி மக்களவைத் தேர்தலில் வாக்களிங்க என தோனியின் மேல் அமர்ந்து கொண்டு குறும்புத்தனத்துடன் கூறியுள்ளார். இதைத்தவிற, உங்களது சக்தியை பயன்படுத்துங்கள் என்ற கேப்ஷனோடு வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்தும் தோனி பதிவு செய்துள்ள இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.