சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த 69.67 ஏக்கர் நிலத்தை 1996ஆம் ஆண்டில் தன்னுடைய உறவினர்கள் பெயரில் சட்ட விதிகளுக்கு புறம்பாக 41 மனைகளாக பிரித்துக் கொடுக்கு கொடுத்துள்ளதாக ஜெகத்ரட்சகன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது நில மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கடந்த 2016ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்து நீதிமன்றம் இந்த நில மோசடி குறித்து விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிட்டது.
நிலுவையில் இருந்த இந்த வழக்கை 2019ஆம் ஆண்டில் சிபிசிஐடி காவல்துறையின் தலைவராக இருந்த ஜாபர் சேட் தனிப்பட்ட வகையில் ஆர்வத்தோடு கையாண்டதாக சொல்லப்படுகிறது. இந்த வழக்கிலிருந்து தப்பிக்க சிபிசிஐடி காவல்துறையின் தலைவராக இருந்த ஜாபர் சேட் ஜாஃபர் சைட் பெரும் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பெரும் பரபரபரப்பை ஏற்படுத்திய இந்த பணபரிமாற்ற முறைக்கேடு நடந்திருப்பதாக அமலாக்க துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து ரகசிய விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை, தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை ஒன்றை அளித்திருந்தது. அதனடிப்படையில், ஜாஃபர் சைட் சிபிசிஐடி தலைவர் பதவியிலிருந்து 26 மே 2020 அன்று இடமாற்றம் செய்யப்பட்டார்.
நில மோசடி மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வருகிற அமலாக்கத் துறையினர் இருவருக்கும் அழைப்பாணை அனுப்பி உள்ளனர். இந்த அழைப்பாணையின் அடிப்படையில் சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று (ஜூலை 1) காலை 11 மணியளவில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் நேரில் ஆஜரானார். இது தொடர்பான விசாரணை பலமணி நேரமாக நடைபெற்று வருகிறது.