மதுரை மாவட்டம், விளாங்குடி பகுதியில் உள்ள சுடுகாட்டில் மயான சிவன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலின் கருவறையில் உள்ள சிலைக்கு பின்புறமாக அரியவகை மண்ணுளி பாம்பு இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து தகவலறிந்த வனத் துறையினர் சிவன் கோயிலுக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து, சிலையின் பின்புறம் இருந்த மண்ணுளி பாம்பை மீட்ட வனத்துறையினர் அதனை நாகமலை வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.
மேலும், மிக அரிய வகை உயிரியான இந்த மண்ணுளி பாம்பு அந்தப் பகுதியில் எவ்வாறு வந்தது என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.