திண்டுக்கல் மாவட்டத்தின் நகர் பகுதிகளான அப்சர்வேட்டரி, பிரகாசபுரம், பாக்கியபுரம் , நாயுடுபுரம், பாம்பார்புரம், செண்பகனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி நகர் பகுதிக்குள் வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
வனப்பகுதிகளில் குடிநீர், உணவு இல்லாததால் வனவிலங்குகள் அவ்வபோது நகர் பகுதிக்குள் வருவதை வாடிக்கையாகவே வைத்துள்ளது. இந்நிலையில், இன்று (ஏப்.23) கொடைக்கானல் பாக்கியபுரம் பகுதியில் காட்டெருமை ஒன்று வயிறு உப்பிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளது
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வன அலுவலர்கள் உயிரழந்த காட்டெருமையை மீட்ட உடற்கூராய்வு செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
ஆய்வின் முடிவில் காட்டெருமை இயற்கையாக உயிரிழந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரிக்க முடியும் என வன அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.