விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் நேற்று இரவு வத்திராயிருப்பு மறவர் தெற்கு தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தங்கள் குடும்பத்தில் உள்ள சிறுவர்களுக்கு ஹனி கேக் வாங்கி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், அந்த கேக்கை சாப்பிட்ட நான்கு சிறுவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து, அவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.