திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள அபிஷேகமங்கலம் என்ற கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார்.
இவருக்கு சொந்தமான தோட்டத்தில் தண்ணீர் தேவைக்காக 30 அடி ஆழத்தில் கிணறு வெட்டி பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில் அவர் வீட்டில் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று தவறுதலாக அந்தக் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடியது.
இதனைக் கண்ட பாலகிருஷ்ணன், பதறியபடி தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இந்தத் தகவலின் பேரில் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
இதையும் படிங்க: திமுக தலைவருக்கு அறிவுரை சொன்ன அமைச்சர் சிவி சண்முகம்!