ETV Bharat / briefs

பல்பொருள் அங்காடியில் தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே இயங்கி வந்த பல்பொருள் அங்காடியில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தது.

Fire at supermarket: 5 lakhs worth of goods burned!
திருவல்லூரில் பல்பொருள் அங்காடியில் தீ விபத்த
author img

By

Published : Jun 28, 2020, 5:22 PM IST

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அதிக வியாபாரம் மிகுந்த பகுதியாக கருதப்படும் காட்டுக்கொல்லைத்தெருவில் நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான ராதா டிரேடர்ஸ் எனப்படும் பல்பொருள் அங்காடி இயங்கி வருகிறது.

ஊரடங்கு உத்தரவால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், திடீரென பல்பொருள் அங்காடியில் தீ பற்றி எரியத்தொடங்கியது. இது குறித்து நாகராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.