ETV Bharat / briefs

ஊரடங்கு மீறல்: ரூ.12 கோடியைத் தாண்டிய அபராத வசூல்! - Tamilnadu police department

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 81 நாள்களில் 12 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரத்து 99 கோடி ரூபாய் அபாராதம் வசூலித்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

Tamilnadu police department
Tamilnadu police department
author img

By

Published : Jun 13, 2020, 8:25 PM IST

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து, தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. மேலும், காவல் துறையினர் தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்து, அவர்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 81 நாள்களில் தடையை மீறியதாக 6 லட்சத்து 27 ஆயிரத்து 96 பேரை காவல் துறை கைதுசெய்து ஜாமினில் விடுவித்துள்ளது. அதேசமயம் 4 லட்சத்து 66 ஆயிரத்து 666 வாகனங்கள் பறிமுதல் செய்து, 12 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரத்து 99 கோடி ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.