ETV Bharat / briefs

வேளாண்துறை பரிந்துரைக்காத ரசாயன பூச்சி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்தக் கூடாது - மாவட்ட ஆட்சியர் - விவசாயிகளுக்கு செய்திக்குறிப்பு வெளியீடு

பெரம்பலூர்: மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை பரிந்துரைக்காத ரசாயன பூச்சி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வேளாண்துறை பரிந்துரைக்காத ரசாயன பூச்சி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்தக் கூடாது - மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Jul 18, 2020, 10:12 PM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா விவசாயிகளுக்கு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் சுமார் 3.40 லட்சம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இறவை மற்றும் மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படும் மக்காச்சோள பயிரானது குறைந்த நாளில் அதிக லாபம் தரும் என்பதால் இப்பயிரை விரும்பி சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் நடப்பு ஆண்டில் காரிப் பருவத்தில் 1.52 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்காச்சோள விவசாயிகளுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கின்ற படைப்புழு தாக்குதல் மூலம் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர். எனவே மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தவது குறித்து ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக வேளாண்துறை பரிந்துரைக்காத ரசாயன பூச்சி மருந்துகளை கண்டிப்பாக விவசாயிகள் பயன்படுத்தக் கூடாது. அதேபோல் ஒரே பூச்சிக்கொல்லி மருந்தையும் தெளிக்கக் கூடாது.

விவசாயிகளுக்கு தேவையான பவேரியா மற்றும் மெட்டாரைசியம் போன்ற உயிர் பூச்சிக்கொல்லிகள் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

பயிர் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி நடப்பாண்டில் படை தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்தி நல்ல விளைச்சல் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: போடியில் தொற்றிலிருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய காவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.