திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூரில் விவாசய பாசனத்துக்கு போதிய தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி நடவுகள் காய்ந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தன.
தற்போது, நடவுப்பணிகள் முடிந்து வயல்களுக்கு ஆற்று நீரை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டது. ஆனால், இன்றையச் சூழலில் கோட்டூர் முள்ளி ஆற்றில் தண்ணீர் திறக்கவில்லை. இதன் காரணமாக கோட்டூர் பகுதியில் விலைநிலங்களில் தண்ணீரின்றி பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன.
இதனால், கோட்டூர் பகுதியில் முள்ளி ஆறு வழியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி 50க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால், மன்னார்குடி திருத்துறைப்பூண்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.