ETV Bharat / briefs

வெளிமாவட்ட நெல்லை கொள்முதல் செய்வதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! - திருவாரூர் மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல்லை கொள்முதல் செய்வதை கண்டித்து விவசாயிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Thiruvarur district news
author img

By

Published : Jul 14, 2020, 4:07 AM IST

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை முடிந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் தேவையான இடங்களில் மட்டும் இல்லாமல் சாகுபடி நடைபெறாத பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நாள்தோறும் 500 மூட்டைகளுக்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

சாகுபடியே நடைபெறாத பகுதிகளிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளுக்கு 30 ரூபாய் முதல் 50 ரூபாய்வரை அலுவலர்கள் பணம் பெற்றுக்கொண்டு, முட்டைகளை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Farmers protest against paddy gudown in thiruvarur
வெளிமாவட்ட நெல்லை கொள்முதல் செய்வதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மேலும், இது குறித்து திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இந்த நிலை தொடர்ந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.