கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎம் கட்சியின் விவசாய சங்கமான அகில இந்திய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, "அத்தியாவசிய உணவுப் பொருள்கள் திருத்தச் சட்டமானது இந்திய விவசாயத்தைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்ற வழிவகுக்கும்.
விவசாயிகள் போராடிப் பெற்ற உரிமையான விலையில்லா மின்சாரம் வழங்கலை ரத்து செய்துள்ள மத்திய அரசின் மின்சார சட்டம் 2020 உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
கரோனா பரவலால் நகர்ப்புறங்கள் மட்டுமல்ல கிராமப்புறங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி 100 நாள் வேலை திட்டத்தை விரிவுப்படுத்தி கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும்.
சிஐடியு விவசாயத் தொழிலாளர்களின் இந்த கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பரிசீலனை வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.