ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த திம்மநாயக்கன் பாளையம், தங்க நகரம், மேட்டுக்கடை, செண்பகப்புதூர், நடுப்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனியார் பால் பொருள்கள் உற்பத்தி நிறுவனம் ஒன்றுக்கு பால் விற்பனை செய்து வந்தனர்.
இவர்களிடமிருந்து அந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக ஒரு லிட்டர் பாலை 36 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வந்துள்ளது. இந்நிலையில் இனி ஒரு லிட்டர் பாலை 25 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்ய உள்ளதாகக் கூறி, விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்ய அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளர்கள், தனியார் நிறுவனத்தைக் கண்டித்து செண்பகப்புதூர் மேட்டுக்கடை நெடுஞ்சாலையில், பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க : சத்தியமங்கலத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!