ETV Bharat / briefs

பென்னிகுவிக்கின் கல்லறையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை! - பென்னிகுவிக்கின் கல்லறையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

தேனி: இங்கிலாந்தில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் கல்லறையை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Farmers demand action against those who damaged Pennyquick's tomb

author img

By

Published : Sep 3, 2020, 6:53 AM IST

தென் தமிழ்நாட்டில் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழ்வது முல்லைப் பெரியாறு அணை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே இந்த அணையை தனது சொத்துக்களை விற்று கட்டி முடித்தவர் கர்னல் ஜான் பென்னிகுவிக்.

பஞ்சத்தால் கொத்து கொத்தாய் செத்து மடிந்த மக்களின் வாழக்கை பசுமையாக மாறியது முல்லைப் பெரியாறு அணையினால் தான். இதன் காரணமாக தாகம் தீர்த்த தந்தையாக தென் மாவட்ட மக்களால் இன்றளவும் கர்னல் ஜான் பென்னிகுவிக் தெய்வமாக வணங்கப்படுகிறார். இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள அவரது கல்லறை கடந்த சில நாள்களுக்கு முன் சேதப்படுத்தப்பட்டதாக வெளியான தகவலால் தேனி மாவட்ட விவசாயிகள் கொதிப்படைந்தனர்.

மேலும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேனி எம்.பி.ஓ.பி.ரவீந்திரநாத்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக்கின் மணி மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்த விவசாயிகள், பின் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாய ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மனித கடவுள் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் கல்லறை சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு விவசாயிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எங்களுடைய நோக்கம் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும். மழையினால் தேவாலயத்தில் உள்ள கல்லறை சேதம் அடைந்தது எனக்கூறுவது நகைப்புக்குரிய ஒன்றாக உள்ளது. ஏராளமான கல்லறைகள் உள்ள அந்த தேவாலயத்தில் பென்னிகுவிக்கின் கல்லறை மட்டும் சேதமடைந்ததாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் இங்கிலாந்து நாட்டுச் சட்டப்படி நூற்றாண்டு கடந்த பென்னிகுவிக்கின் கல்லறையை அகற்றப் போவதில்லை என்று லண்டனில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பபட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.