ETV Bharat / briefs

பத்தாம் வகுப்பு தேர்வு: மாணவர்களுக்கு முகக்கவசம்! - பொதுத் தேர்வு

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோவிட்-19 பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசங்கள் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்டன.

 face masks given to 10th students those who are going to write exam

author img

By

Published : Jun 5, 2020, 4:55 PM IST

கோவிட்-19 பரவல் அதிகமுள்ள சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுத உள்ள மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் மற்றும் முகக்கவசங்களை மத்திய சென்னை மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார்.

அரசின் கரோனா பாதுகாப்பு அறிவுறுத்தல்படி, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தனி தனியாக அமர வைக்கப்பட்டிருந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டை வழங்கி தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பல்வேறு அறிவுரைகளை அவர் வழங்கினார்.

ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொண்ட மாணவர் கூறும்போது, தேர்வினை எப்போது வைத்தாலும் எழுதுவதற்கு தயாராக உள்ளதாகவும், தங்களுக்கு மாஸ்க் வழங்கப்பட்டது பயனுள்ளதாக அமைந்தது என்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.