இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், " சேவையிலிருந்து ஓய்வு பெற்ற எனக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டுவதால் எந்த பலனுமில்லை. அந்த அமைப்பிடமிருந்து எந்தவிதமான ஆதாயமும் எனக்கு ஏற்படப்போவதில்லை. ஆனாலும், என் மனதில் தோன்றுவதைதான் நான் சொல்கிறேன். உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பு ஆர்எஸ்எஸ் என்பதே உண்மை. இது இந்த நாட்டை, அதன் பண்பாட்டு விழுமியங்களைக் காக்க யாரிடமிருந்தும் எந்தவிதமான புகழையும் எதிர்ப்பார்க்காமல் உழைக்கும் பேரியக்கம்.
இதுபோன்ற ஒரு அமைப்பை ஒருவர் விமர்சிப்பதால், அது அந்த அமைப்பை பாதிக்குமென நான் கருதுவதில்லை. நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் பணியாற்ற முடிவு செய்தால், அதற்காக என்னை இழிவுபடுத்தவோ விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை இல்லை.
இந்தியாவை ஊழலின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை எடுக்க காங்கிரஸ் தயாராக இருந்தால், நான் அதை வரவேற்பேன். அவர்களோடு இணைந்து பணியாற்றுவேன்" என்றார்.