ETV Bharat / briefs

ஈரோட்டில் பரவும் கரோனா: தனிமைப்படுத்தப்படும் வீதிகள்! - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: கடந்த மூன்று நாள்களில் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் வசித்து வந்த  நான்கு வீதிகளும் தனிமைப்படுத்தப்பட்டது.

Erode
Erode
author img

By

Published : Jun 20, 2020, 1:28 PM IST

ஈரோடு மாவட்டம் பச்சை நிற மண்டலமாக மாறியதற்குப் பிறகும் 60 நாள்களுக்கு மேலாக மாவட்டத்தில் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத நிலை இருந்தது.

ஆனால் தற்போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து மாவட்டத்திற்குள் வந்தபோது அவர்களில் பலருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர் ஈரோடு வளையக்கார வீதிப் பகுதியைச் சேர்ந்த சீருந்து (கால்டாக்ஸி) ஓட்டுநரின் மனைவி சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு வந்தபோது நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வசித்த பகுதியில் வயதான பெண், ஆண் இருவருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதேபோல் வளையக்கார வீதியையொட்டியுள்ள அகத்தியர் வீதிப் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரே வீதியில் நான்கு பேர் நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானதால் அப்பகுதியிலுள்ள 100 வீடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளை விட்டு வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிருமிநாசினி உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனிடையே ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட கண்ணகி வீதிப் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண்ணொருவர் சென்னைக்கு சென்றுவிட்டு ஈரோட்டிற்கு காரில் திரும்பும்போது சந்தேகத்தின்பேரில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் வசிக்கும் கண்ணகி வீதிப்பகுதியிலுள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

கடந்த 80 நாள்களுக்கும் மேலாக எவ்வித தனிமைப்படுத்தலும் இன்றி மக்கள் இருந்தனர்.

ஆனால், தற்போது மூன்று நாள்களில் நான்கு பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் நான்கு வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.