மதுரை பழங்காநத்தம் புறவழி சாலை நேரு நகரில் டயர் விற்பனை நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் இரண்டாவது தளத்தில் உள்ள உரிமையாளரின் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பும்போது, லிஃப்ட் முதல் தளத்தில் பழுதாகி நின்றது.
இந்நிலையில் அலுவலகத்தில் உள்ள பிற ஊழியர்கள், பொதுமக்கள் இணைந்து லிஃப்டைத் திறக்க எவ்வளவோ முயன்றனர். எனினும் திறக்க முடியாத காரணத்தால் மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை டவுன் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் வெங்கடேசன் அவர்களின் தலைமையிலான குழுவினர் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி ஹைட்ராலிக் கட்டர் மூலமாக லிஃப்ட் கதவை இரண்டாக உடைத்து, ஜெனரேட்டர் உதவியுடன் திறந்து சிக்கியிருந்த ஊழியரை மீட்டனர்.
தகவல் கொடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஊழியரை பத்திரமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.