ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உரிகம் காப்பு காட்டு பகுதியிலுள்ள பிலிக்கல் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் தெரிந்தது.
இதனையடுத்து வனத் துறையினர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, மருத்துவக் குழுவினர் அவ்விடத்திற்குச் சென்று அங்கேயே உடற்கூராய்வு செய்து புதைத்தனர்.
இதனைத்தொடர்ந்து யானையை தந்ததற்காக கொன்றார்களா அல்லது இயற்க்கையாக இறந்த பின் தந்தத்தை பிடுங்கி சென்றார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் வனத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பிலிக்கல் வனப்பகுதி கர்நாடக மாநில எல்லை அருகில் இருப்பதால் குற்றவாளிகள் எளிதில் தப்பித்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு யானைகள் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.