ETV Bharat / briefs

சிறிய கடைகளை டிஜிட்டல் மயமாக்க 'டியூநவ் செயலி' - சென்னை மாவட்டம்

சென்னை: சிறு கடைகள் இணைய வர்த்தகத்தில் ஈடுபட உதவும் வகையில், டியூநவ் (duNOW) என்ற செயலி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

duNOW app launch
duNOW app launch
author img

By

Published : Jun 10, 2020, 7:14 PM IST

கரோனா தொற்று காரணமாக இணைய வர்த்தகம் அதிகரித்திருக்கும் நிலையில், மளிகைக் கடைகள், காய்கறி விற்கும் கடைகள், மருந்தகங்கள், ஸ்டேஷனரி கடைகள், சிறிய உணவகங்கள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள், தங்களது வணிகத்தை இணைய வழியில் தொடர டியூநவ் (duNOW) என்ற செயலி, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிக முதலீடு தேவை என்பதால், சிறு வியாபாரிகள் இணைய வர்த்தகத்தை நாடாத நிலையில், நாள் ஒன்றுக்கு 14 ரூபாய் செலவாகும் வகையில் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. சிறு கடைகளின் வியாபார வளர்ச்சிக்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்தச் செயலியில், விநியோகம், இருப்புப் பட்டியல், பணப்பரிவர்த்தனை (ஜிஎஸ்டி உடன்), கடன் மேலாண்மை, தகவல் பரிமாற்றம் போன்ற ஒருங்கிணைந்த சேவைகள் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

விநியோகஸ்தர்களிடம் இருந்து கடன் வசதி பெறுதல், இணையதளம் வாயிலாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகை வழங்குதல், இணையதளம் வாயிலாக கடையை பிரபலமடையச் செய்து, அருகாமையில் இருக்கும் வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிப்பது உள்ளிட்டவற்றை சாத்தியப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலி மூலம் சிறிய கடைக்காரர்கள், தங்களது வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்களை இணைத்து, இணைய வர்த்தகம் மூலம் வணிகத்தை பெருக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.