ஆவடிக்குட்பட்ட திருமுல்லைவாயல், 8ஆவது வார்டில் சரஸ்வதி நகர் பிரதான சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் தனியார் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபம் மற்றும் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன.
இதனால் இந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இந்த சாலையில் இரு புறமும் நகராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. வீடுகள், தனியார் மருத்துவமனை, ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் இந்த கால்வாய்கள் வழியாக செல்கிறது.
தற்போது கால்வாயிலிருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. மேலும், கழிவுநீர் சாலையில் ஆங்காங்கே தேங்கியும் நிற்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், கழிவுநீரை கால்களில் மிதித்த படி நடந்து தான் சென்று வர வேண்டிய அவலநிலை உள்ளது.
கால்வாய்கள் பல இடங்களில் உடைந்தும், திறந்தும் கிடக்கின்றன. இதனால் சாலைகளில் செல்லும் சிறுவர்கள் அச்சத்துடன் சென்றுவருகின்றனர். தற்போது ஆவடி மாநகராட்சியில் கரோனா தொற்றால் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 21 பேர் பலியாகியும் உள்ளனர். இதற்கிடையில் சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 22 வயது ஆம்புலன்ஸ் உதவியாளர் கரோனாவால் உயிரிழப்பு!