சென்னை தலைமைச் செயலகத்தில் டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி குறித்தும், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் அமைச்சர் ஜெயக்குமார் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் மீன்வளப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் டாக்டர் சுகுமார், துறைச் செயலாளர் கோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.
இக்கூட்டத்தில், நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.