ETV Bharat / briefs

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கழுதைப் பால்: சேலத்தில் விற்பனை அமோகம்! - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம்: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கழுதை பால் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது.

சேலத்தில் விற்பனை அமோகம்
சேலத்தில் விற்பனை அமோகம்
author img

By

Published : Sep 12, 2020, 4:35 PM IST

சேலத்தில் கழுதைகளுடன் அதன் உரிமையாளர்கள் வீடு வீடாகச் சென்று கழுதைபால் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு சங்கு அளவு கழுதைப்பால், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் கழுதையுடன் வந்த சுப்பிரமணி கூறுகையில்," நான் தருமபுரியில் இருந்து வருகிறேன். தமிழ்நாடு முழுவதும் நடந்தே சென்று, கழுதைப் பால் விற்று வருகிறேன். கழுதைப் பால் மருத்துவக் குணம் கொண்டது.
வெறும் வயிற்றில், ஏழு நாள்கள் தொடர்ந்து குடித்தால் ஜீரண சக்தி, மஞ்சள் காமாலை, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் வராது. சிறிய குழந்தைகள் என்றால், ஒரு சங்கு பால் போதும், பெரியவர்களுக்கு, 50 மில்லி பால் குடிக்க வேண்டும்" என்றார்.
மேலும் கழுதை பால் கறந்த பின், ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனால் கெட்டுபோய்விடும் என்பதாலும், கறந்தவுடன் குடித்தால் சூடாகவும் சுவையாகவும் இருக்கும் என்பதாலும் , உடனுக்குடன் கறந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வீடு தேடி வந்து விற்பனை செய்யும் கழுதைப் பாலை அம்மாப்பேட்டை பெரியார் நகர், பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தனர்.

இதையும் படிங்க: கடுமையான பொருளாதார இழப்பில் தவிக்கும் பால் உற்பத்தியாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.