ETV Bharat / briefs

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுச் செல்வதா? மத்திய அரசுக்கு பி.ஆர். பாண்டியன் கண்டனம் - கூட்டுறவு வங்கிகள்

திருவாரூர்: கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டன் கீழ் கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதா? மத்திய அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

author img

By

Published : Jun 25, 2020, 5:00 PM IST

இது தொடர்பான அறிக்கையில், "மத்திய அமைச்சரவை டெல்லியில் இன்று (ஜூன் 25) கூடி இந்தியா முழுவதுமுள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டின் கீழ் கண்காணிக்கப்படும் என கொள்கை முடிவெடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மாநில அரசுகளின் நிர்வாக பட்டியலில் உள்ளன. தமிழ்நாட்டில் விவசாயிகளின் பங்களிப்பில் விவசாயிகளை கொண்ட அமைப்பின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. நபார்டு வங்கியின் மூலம் நிதி உதவி பெற்றாலும் அதற்கான அனைத்து வங்கி உத்திரவாதங்களையும் மாநில அரசு பொறுப்பேற்கிறது. வட்டி உள்ளிட்ட அனைத்து நிதிச்சுமைகளையும் மாநில அரசுகளே ஏற்றுக் கொள்கிறது.

பணியாளர்கள் மற்றும் நிர்வாக செலவினங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விவசாயிகளின் வருவாய் பங்கு தொகை பங்களிப்புடன் மாநில கூட்டுறவு துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. ஆண்டுதோறும் கடன் கொள்கைகளை திட்டமிடுவதும், விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வட்டி சலுகையுடன் கடன் வழங்குவதையும் விவசாயிகளே திட்டமிட்டு செயல்படுத்துகிற ஒரு ஜனநாயக அமைப்பு மட்டுமின்றி கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது. ஆண்டுதோறும் இயற்கை சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்படுமேயானால் கடன் குறித்த நிவாரணத்தை மாநில அரசுகளே ஏற்றுக்கொள்கிறது.

இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் உத்திரவாதப்படுத்தப்படுகிறது. எனவே, கூட்டுறவே நாட்டுயர்வு என்ற வரலாற்று புகழுக்குச் சொந்தமான கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல். அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது. கிராம பொருளாதார வளர்ச்சியை முற்றிலும் முடக்கும் செயல்.

இது குறித்து தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டில் கொண்டுச் செல்ல அனுமதிக்கமாட்டோம் என கொள்கை முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன". இவ்வாறு அந்த அறிக்கையில் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.