ETV Bharat / briefs

சூரிய கிரகணம் பற்றிய அரிய தகவல்கள்! - வளைய சூரிய கிரகணம்

சென்னை: ஜூன் 21ஆம் தேதி நிகழவிருக்கும் வளைய சூரிய கிரகணத்தை சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பெரும்பாலானப் பகுதிகளில் காண முடியும்.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்
author img

By

Published : Jun 19, 2020, 7:22 PM IST

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால், பூமியின் பார்வையில் இருந்து சூரியன் மறையும். இதுவே 'சூரிய கிரகணம்’ என்று கூறப்படுகிறது.

சந்திரன் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது. இதனால் சந்திரன் சில நேரம் பூமிக்கு அருகிலும், சில நேரம் பூமிக்கு வெகு தொலைவிலும் செல்கிறது. அது தொலைவில் இருக்கும்போது, பூமியிலிருந்து பார்க்கும்போதும் சந்திரனின் அளவு சிறியதாகக் காணப்படுகிறது. இந்த நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்ந்தால், சந்திரனால் முழு சூரியனையும் மறைக்க முடியாது. உச்ச கட்ட கிரகணத்தின் போது மறையாத சூரியனின் விளிம்புப் பகுதிகள், நெருப்பு வளையம்போல் சந்திரனைச் சுற்றியிருக்கும். இதுதான் 'வளைய சூரிய கிரகணம்' எனப்படுகிறது.

இது போன்ற 'வளைய சூரிய கிரகணம்' இதற்கு முன் ஜனவரி 15, 2010 மற்றும் டிசம்பர் 26, 2019 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.

இந்த சூரிய கிரகணத்தை, தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், திருச்சி, கோவை, மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் வரும் ஜூன் 21 ஆம் தேதி பார்க்க இயலும்.

சென்னையில் காலை 10:22 மணிக்குத் தொடங்கும் கிரகணம் நண்பகல் 1.41 மணிக்கு முடியும். உச்சகட்ட கிரகணம் பகல் 11:58 மணிக்கு நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தை சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு, 'ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம்' ஏற்பாடு செய்துள்ளது.

கிரகணங்கள் பற்றி பல்வேறு கற்பிதங்கள் உண்டு. கிரகண நேரத்தில் வெளியே நடமாடக்கூடாது, சாப்பிடக்கூடாது என்ற பல்வேறு கட்டுக்கதைகள் உள்ளன.

ஆனால், கிரகணங்களால் நம் உடல்நலனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கிரகணத்தை வைத்து உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள் பற்றிய அறிவியல் உண்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

கர்ப்பிணிகள் கிரகணங்களைப் பார்க்கலாமா?:

உலகில் பல பகுதிகளில் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின்போது கர்ப்பிணிகளை பார்க்க அனுமதிப்பதில்லை, அவர்கள் கிரகணத்தினைப் பார்க்கக்கூடாது என்ற மூட நம்பிக்கை இன்றளவும் உள்ளது. இதுபோன்ற நம்பிக்கைக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. எப்போதும் போல் கர்ப்பிணிகள் அன்றும் நடமாடலாம், சாப்பிடலாம் எந்த மாற்றமும், பாதிப்பும் ஏற்படாது.

சூரிய கிரகணத்தைப் பார்க்க அனைவருக்கும் இருக்கும் முன்னெச்சரிக்கையே இவர்களுக்கும் பொருந்துமே தவிர, எந்தப் புதிய கதிர் வீச்சுகளும் ஏற்படாது.

சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது; இதனைப் பார்ப்பதற்கு அதற்குரிய கிரகண கண்ணாடிகளை அல்லது முறையான ஃபில்டர்களுடன் கூடிய கேமராவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சூரிய கிரகணத்தின் போது சாப்பிடுதல், குடித்தல், குளித்தல், வெளியே செல்லுதல் போன்ற செயல்களைச் செய்யலாம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.