ETV Bharat / briefs

'மின் கட்டணத்தைக் குறைக்க முதலமைச்சருக்கு மனம் இல்லை' - ஸ்டாலின் - cm on electricity bill hike

சென்னை: கரோனா பேரிடர் காலத்தில் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு, முதலமைச்சரின் மனம்தான் தடையாக உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மின் கட்டனம் குறைக்க முதலமைச்சருக்கு மனம் இல்லை - ஸ்டாலின்

author img

By

Published : Jul 8, 2020, 6:47 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்சார சட்ட விதிகளின்படி ஊரடங்கு காலத்தின்போது முந்தைய மின் கட்டணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது என்று அதிமுக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து. மின் நுகர்வோரின் துயரத்தை உணர மறுப்பதற்கு மிகுந்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய மாதத்தில் செலுத்திய கட்டணத்திற்குரிய யூனிட்களை கழிக்காமல், செலுத்திய பணத்தை மட்டும் கழிப்பதால்தான் இந்தக் கட்டண உயர்வுப் பிரச்னை என்பதை இன்னும் மின்துறை அமைச்சர் தங்கமணியோ அல்லது முதலமைச்சர் பழனிசாமியோ உணராமல் இருப்பது கரோனா ஊரடங்கை விட மிகக் கொடுமையாக இருக்கிறது.

மேலும், அதிமுக அரசே மேற்கோள் காட்டும் மின்சார சட்டம், 2003இன் படியே மின் நுகர்வோருக்கு கரோனா பேரிடரை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி மின் கட்டணத்தைக் குறைக்கலாம். அதில் எவ்வித தடையும் இல்லை. மனம்தான் முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் தடையாக இருக்கிறது.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை விட, முதலமைச்சர் பழனிசாமிக்கு இதயத்தில் ஈரம் இருந்தால், இந்தச் சலுகையைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது எளிதானதே என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.