தென்தமிழ்நாடு முதல் வடதமிழ்நாடுவரை உள்ள மக்கள் திருப்பதிக்கு செல்ல முக்கிய சாலையாக உள்ள கடலூர்-சித்தூர் (SH-9) சாலையில் காட்பாடி கல்புதூர் முதல் ஆந்திர எல்லைவரை 5 கி.மீ தூரத்திற்கு மைய தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இச்சாலையில் காவல் சோதனை சாவடி, வனத்துறை சோதனை சாவடி, வணிகவரி துறை சோதனைச் சாவடி உள்ளிட்டவை உள்ளன.
தினமும் இச்சாலை வழியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுவருகின்றன. இந்நிலையில், இச்சாலையை அகலப்படுத்தி சாலையின் மையப்பகுதியில் உயர் மின் விளக்குகள் மற்றும் சோதனைச் சாவடிகள் அமைந்துள்ள இடத்த்தில் உயர் கோபுர மின் விளக்குகளை அமைத்து கொடுக்கும்படி தமிழ்நாடு முதலமைச்சருக்கு காட்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் ஏற்கனவே முன்வைத்தை காங்கேயநெல்லூல் முதல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்வரையிலான பாலாற்று மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.
பொன்னையாற்றில் குகையநெல்லூர் அருகில் ஒரு தடுப்பு அணை கட்டப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் நினைவுபடுத்துவதாக முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில், எம்.ஜி.ஆர். சிலை அவமதிப்பு - அமைச்சர் காமராஜ் கண்டனம்