தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 97ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதனையடுத்து கரோனா தொற்றால் கடந்த மூன்று மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்து வாடும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்களுக்கு மாவட்ட பிரதிநிதி அமுதபாரதி பெருமாள் ஏற்பாட்டில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரிசி உள்ளிட்ட மளிகை பொருள்களை மாவட்ட கழக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் வழங்கினார்.
அப்போது கழக துணை செயலாளர் கார்த்திகேயன், செந்தில், தேவேந்திரன் கண்ணன் உள்ளிட்ட கழகத்தினர் உடனிருந்தனர். மேலும், தகுந்த இடைவெளி விட்டு புகைப்பட கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.