தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அவரது தொண்டர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.
இதன் ஒருபகுதியாக திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மு. கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி, பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார், நத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆண்டி அம்பலம், திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் வேலுச்சாமி, கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.