திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள 1,100 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, கைகளில் தடவக்கூடிய கிருமிநாசினிகள் பயன்படுத்துவது, கிருமிநாசினி முறையாக தெளிக்கப்படுவது ஆகியவற்றை உறுதிசெய்ய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், காக்களூர் தொழில் பூங்காவில் செயல்படும் தனியார் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சிறப்பு மருத்துவ முகாம் வாயிலாக, அங்கு பணிபுரியும் 300க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்களுக்கு தொற்று உள்ளதா என பரிசோதனை செய்வதையும் அவர் பார்வையிட்டார்.