திருவள்ளூரை அடுத்த ஈக்காடு ஊராட்சியில் கடந்த மார்ச் மாதம் இந்தியன் சர்க்கஸ் என்ற பெயரில் சர்க்கஸ் காட்சிகள் தொடங்கப்பட்டன. ஒரு வாரம் மட்டுமே நடைபெற்ற இந்த சர்க்கஸ் காட்சி ஊரடங்கு உத்தரவால் நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து பல மாதங்களாக அந்த சர்க்கஸ் குழுமத்தில் உள்ள 60 கலைஞர்கள் இரண்டு ஒட்டகம், மூன்று குதிரைகள், நாய்கள் ஆகியவற்றை பராமரிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. மேலும், சர்க்கஸ் கலைஞர்கள் வாழ வழியின்றி பட்டினியால் வாடுவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்று (ஜூன் 26) திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், வட்டாட்சியர் விஜயகுமாரி, திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் சர்க்கஸ் கூடாரம் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள், சனிடைசர், முகக் கவசம் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள், வருவாய்த்துறையினர் கலந்துகொண்டனர்.