கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், கூடலூரில் உள்ள சிவாயம் ஏரியை சிறப்புத் தூர்வாரும் திட்டத்தின் கீழ், தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை கரூர் மாவட்டத்திற்கான சிறப்புக் கண்காணிப்பு அலுவலரும்; கால்நடை பராமரிப்புத்துறையின் அரசு முதன்மைச் செயலருமான கோபால், மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் இதுகுறித்து சிறப்பு அலுவலர் கோபால் கூறுகையில், 'கரூர் மாவட்டத்தில் சிறப்புத் தூர்வாரும் திட்டத்தின் கீழ், 11 பணிகள் சுமார் 43 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று வருகிறது. இதற்காக 138 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு, செய்யப்பட்டு பணிகள் 26 கிலோமீட்டர் தூரம் நிறைவு பெற்றுள்ளது.
மேலும் இதன்மூலம் 60 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வருகின்ற ஜூன் 20ஆம் தேதிக்குள் 100 விழுக்காடு பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.