ETV Bharat / briefs

கரோனா தொடர்பாக மத ரீதியில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு! - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: கரோனா பரவல் தொடர்பாக மத ரீதியில் தவறான தகவல்களை பரப்பியதாக தமிழ்நாடு முழுவதும் 356 பேர் மீது 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு துணை காவல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொடர்பாக மத ரீதியாக பொய் தகவல் பரப்பிய மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Jul 8, 2020, 6:19 AM IST

கரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக மத ரீதியில் தவறான தகவல்களை இணையதளங்களில் வெளியிடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி உமர் பாரூக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழ்நாடு துணை காவல் ஆணையர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கரோனா வைரஸ் தொற்றுடன் மதத்தை சம்பந்தப்படுத்தி சமூக வலைதளங்களில் தவறான தகவல் வெளியிட்டதாக, சென்னையில் எட்டு பேர் மீது எட்டு வழக்குகளும், மதுரையில் 167 பேர் மீது 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுபோல, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 356 பேர் மீது 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை கைது செய்யப்பட உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும்படி மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, விசாரணையை ஜூலை 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.