‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இதையடுத்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள, 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.
இதையடுத்து அவர் இயக்குநர் நாகேந்திரன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அப்படத்தின் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் இன்று வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இயக்குநர் பா.ரஞ்சித் படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார். அதில், ஐஸ்வர்யா தத்தா இதுவரை பார்த்திராத அவதாரத்தில் தோன்றியுள்ளார்.
‘மிளிர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சூர்யா தேவி தயாரிக்கிறார். விரைவில் படத்தில் பணியாற்ற உள்ள நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.