திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.
இங்கு புரட்டாசி மாத தொடக்கத்தை முன்னிட்டு, 12 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக 16-வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, யோக ஆஞ்சநேயர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த கோலத்தில் சுவாமியை தரிசிக்கும் அனைவருக்கும் அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என்றும்; ஆஞ்சநேயரின் பரிபூரண அருள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே புரட்டாசி மாத தொடக்கத்தை முன்னிட்டு யோக ஆஞ்சநேயர் அலங்காரத்தைக் காண திண்டுக்கல், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து தரிசித்தனர்.
அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி மாத சிறப்பு வழிபாடு!
திண்டுக்கல்: அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி மாத தொடக்கத்தை முன்னிட்டு சுவாமி யோக ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.