இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியத்தின் செயல் இயக்குநர் பிரபுசங்கர் கூறுகையில்," சென்னை குடிநீர் வாரியம் கடந்த 2017ஆம் ஆண்டு "டயல் ஃபார் வாட்டர் 2.0" திட்டத்தின் மூலம் இணையம் மூலமும், தொலைபேசி வழியாகவும், தண்ணீர் தேவைப்படுவோருக்குத் தண்ணீர் வழங்கும் சேவையைத் தொடங்கியது.
இத்திட்டத்தில் சென்னை மாநகர மக்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பதிவு செய்து குடிநீர் லாரிகள் மூலம் பெற்று வந்தனர். தற்போது சிறந்த சேவை வழங்கல் மற்றும் மின் ஆளுமைக்கான விருதுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் டயல் பார் வாட்டர் 2.0 திட்டம் தேர்தெடுக்கப்பட்டுள்ளதால், அந்த விருதினை பெறுவதற்காக குடிநீர் வாரிய செயல்பாடுகள் மற்றும் சேவைகள் குறித்து சென்னை மக்கள் இணையத்தில் வாக்களித்து விருது பெறுவதற்கு உதவிட வேண்டும்"என வேண்டுகோள் விடுத்துள்ளார்.